GHJ

இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு பிறப்பித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது அரசுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று மேலும் 716 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

Advertisment

மேலும் சென்னையில் இன்று மட்டும் 510 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது. இன்று கரோனாவால் 8 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 83 பேர் குணமடைந்ததால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும்2,134 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.