fgh

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார். மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையை பிற்பகலில் அவர் வழங்க இருக்கிறார். மருந்துவ கலந்தாய்வு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெற இருக்கிறது. இதன் மூலம் 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் பலனடைய உள்ளனர். 34,424 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த நிலையில், 3,650 மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடக்க உள்ள நிலையில் மருத்துவ கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment