b

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தாக்கம் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் இன்னும் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படாமால் இருக்கிறது.

Advertisment

இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் 104 பேருக்கு சில நாட்களுக்குமுன் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஐ.ஐ.டி மாணவர்கள் அனைவருக்கும் கரோனா சோதனை செய்யப்படும் என்று ஐ.ஐ.டி நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கிடையே மேலும் 79 மாணவர்களுக்குத் தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment