தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்க அரசு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் மற்றும் பள்ளி விடுதிகளும் திறக்கப்பட்டன.தமிழ்நாடு முழுவதும் பரவலாக சில பள்ளிகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று (14.09.2021) துறையூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பயின்றுவரும் 13 மாணவர்களுக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.அவர்களில் ஒரு மாணவர் சொந்த ஊருக்குச் சென்று பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி விடுதியில் தங்கியுள்ள மீதமுள்ள மாணவர்களுக்கும் உரிய பரிசோதனை மேற்கொண்டுசிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.