Skip to main content

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்தவருக்கு கரோனா!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

Corona for someone who came to Trichy from Singapore!

 

'ஒமிக்ரான்' வகை கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்தவகையில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனையானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், நேற்று (02/12/2021) சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த பயணிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், ஒருவருக்குக் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. அவருக்கு ஒமிக்ரான் வகை கரோனா பாதிப்பு உள்ளதா என்பது குறித்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கரோனா உறுதியான நபர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

 

கரோனா நோய்த்தொற்று உறுதியான நபர் உடனடியாக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு என்ன வகை கரோனா என தெரியவரும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். 

 

சிங்கப்பூரில் ஏற்கனவே ஒமிக்ரான் கரோனா பரவியுள்ள நிலையில், அங்கிருந்து வரும் பயணிகளைக் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (01/12/2021) விமான பயணிகள் 477 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம்; பயணிகள் மகிழ்ச்சி!

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Omni buses operate from Coimbatore; Travelers rejoice

சென்னை கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார்.

இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்த போது, “கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம்.

Omni buses operate from Coimbatore; Travelers rejoice

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது” என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கோயம்பேட்டில் இருந்து நேற்று (10.02.2024) இரவு முதல் மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதை பயணிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். 

Next Story

போலி பாஸ்போர்ட்; விமான நிலையத்தில் வைத்து காப்பு போட்ட காவல்துறை

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Returnee arrested on fake passport at Trichy airport

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இம்மிகிரேஷன் அதிகாரி சுஜிபன் தலைமையிலான அதிகாரிகள் பயணிகளை சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளை அவர்கள் சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது தஞ்சாவூர்  ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (39) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் போலியான அரசு முத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரைப் பிடித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ஆனந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.