தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் கடும் அவதிகளை சந்தித்துவருகின்றனர். இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தம்மை தனிமைப்படுத்திகொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். அதனால் தமிழகத்தின் பல இடங்களிலும் கரோனா மருத்துவ முகாமை திறந்துவருகின்றனர்.
அதேபோல், சென்னை அண்ணாநகர் காந்தி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய 100 படுக்கைகள் கரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளன. இதனை நாளை (29.05.2021), அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் திறக்கவுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-05/wrd-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-05/wrd-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-05/wrd-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-05/wrd-4.jpg)