Published on 21/04/2022 | Edited on 21/04/2022
சென்னை ஐஐடியில் ஒரே நாளில் 12 பேருக்கு கரோனா செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் கரோனா ஒருநாள் பாதிப்பு இன்றிலிருந்து அதிகரிக்கலாம் என மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் 31 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதிதாக 10 மாவட்டங்களில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 21 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 243-ல் இருந்து 256 ஆக அதிகரித்துள்ளது.