Skip to main content

கரோனா நோய் எதிர்ப்பு திறன் ஆய்வு.. எந்த மாவட்டத்திற்கு முதலிடம் தெரியுமா?

Published on 31/07/2021 | Edited on 31/07/2021

 

corona

 

தமிழகத்தில் நேற்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,859ல் இருந்து 1,947 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 68 நாட்களாக கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் அதிகரித்தது. சென்னையில் நேற்று மேலும் 215 பேருக்கு கரோனா உறுதியாகியது. இதனால் சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக கரோனா பாதிப்பு அதிகரித்தது.

 

நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,050 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் 24 பேரும், தனியார் மருத்துவமனைகளில் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் இணை நோய்கள் ஏதும் இல்லாத நிலையில் நேற்று கரோனாவால் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஆர்வமாக வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர்.

 

கரோனா நோய் எதிர்ப்பு திறன் உருவாகியுள்ளதா என்பதைக் கண்டறிய Sero சர்வே என்ற குருதிசார் அளவீடு ஆய்வு அண்மையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளோருக்கான நோய் எதிர்ப்பு சதவிகிதம் தொடர்பான அறிவிப்பை பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 66.2 சதவிகிதம் பேருக்கு கரோனா நோய் எதிர்ப்பு திறன் உருவாகி உள்ளது. அதிகபட்சகமாக விருதுநகர் மாவட்டத்தில் 84 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஈரோட்டில் 37 சதவிகிதம் பேருக்கு கரோனா நோய் எதிர்ப்பு திறன் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கரோனா இரண்டாம் அலைக்கு பிறகு சென்னையில் 82 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்