தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக தமிழகத்தில் 3,000க்கும் அதிகமானோருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.3,358பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்,மற்ற 150 பேர்வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்பதுதெரியவந்துள்ளது.
எட்டு நாட்களாகதமிழகத்தில் இரண்டாயிரத்தை கடந்திருந்தகரோனா தற்போது முதல் முறையாகமூன்றாயிரத்தைகடந்திருக்கிறது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,977 என்ற எண்ணிக்கையில் உள்ளது. அதேபோல் சென்னையில் ஒரேநாளில் 1,834 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 47,650 ஆக உள்ளது.
அதேபோல் இன்று ஒரேநாளில் 45 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில்29 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 16 பேரும்மரணமடைந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 911 ஆகஉள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சம் 694 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 39,999 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் இன்று ஒரே நாளில் 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.