Skip to main content

நடிகர் வடிவேலுவை தொடர்ந்து இயக்குநர் சுராஜுக்கும் கரோனா உறுதி!

Published on 25/12/2021 | Edited on 25/12/2021

 

 Corona confirms director Suraj

 

தமிழ்நாட்டில் தீவிரமாக இருந்த கரோனா தொற்று தற்போது குறைந்துவருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை சீராக இருந்து கொண்டேவருகிறது. கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையிலேயே இருந்துவருகிறதே தவிர, தொற்றை முழுவதுமாக குறைக்க இயலவில்லை. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்களுக்குக் கரோனா தொற்று ஏற்படுகிறது.  

 

அந்தவகையில் கடந்த 24 ஆம் தேதி நடிகர் வடிவேலுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இயக்குநர் சுராஜ் நடிகர் வடிவேலுவை வைத்து 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்று வந்தது. இதில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு லேசான சளி இருமல் இருந்ததால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அப்படத்தின் இயக்குநர் சுராஜ்க்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கண்ணீர் விட்டு அழுத பா.ரஞ்சித பட இயக்குநர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
pa.ranjith movie j.baby director suresh maari emotional at press meet

பா. ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'J.பேபி'. இப்படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டோனி பிரிட்டோ என்பவர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் டீசர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. மேலும் 'நெடுமரம் தொலைந்ததே' என ஒரு பாடலின் லிரிக் வீடியோ அதற்கு முன்னதாக வெளியானது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படம் மார்ச் 8 ஆம் தேதி ஆகிய நாளை யு சான்றிதழுடன் வெளியாகவுள்ளது. இதையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் படக்குழுவினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். படம் முடிந்து பலரும் இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்க அதனால் எமோஷனலான இயக்குநர் சுரேஷ் மாரி கண்ணீர் விட்டு அழுதார். பின்பு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.