






தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் குழந்தைகளுக்கான கரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி நேற்று (31.05.2020) நடைபெற்றது.
தமிழகத்தில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் மக்களிடையே கரோனா பரவுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் குழந்தைகளுக்கான கரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி நேற்று (31.05.2020) நடைபெற்றது. சென்னை, மயிலாப்பூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்த 25 குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்று ஓவியங்களை வரைந்து அசத்தினர். அவர்கள் அனைவருக்கும், தீயணைப்புத்துறை தென்சென்னை மாவட்ட அலுவலர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.