தமிழகத்தில் கரோனாமீண்டும் பரவிவரும் நிலையில்,திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமேஅனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்டபல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து, அவை செயல்படுத்தப்பட்டும் வருகிறது. தொடர்ந்து கரோனாபாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் சிலகட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என்பது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்நிலையில் நெல்லை மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 47 பேருக்கு ஒரே நாளில் கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவேஏழு பேருக்கு அங்கு கரோனாதொற்று ஏற்பட்ட நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 40 பேருக்கு கரோனாஇன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தீவன ஆலையில் 69 ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் 69 பேருக்கு கரோனாஉறுதியானதால் தீவன ஆலையைசுற்றி உள்ள சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டு உள்ளது.