Corona for 33 people in a village of 100 people !!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 பேருக்கும் குறைவாக மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமத்தில் 33 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கடந்த ஒரு மாதமாக கரோனா தொற்று கண்டறியப்பட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களிலும் இதுபாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு அலுவலகங்களிலும் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுசிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல கறம்பக்குடியில் வேலைக்காக அருகில் உள்ள மானியவயல் கிராமத்தில் இருந்து வந்து சென்றவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு பலருக்கும் பரவியுள்ளது. அந்த கிராமத்தில் சுமார் 30 குடும்பங்களை சேர்ந்த 100 க்கும் குறைவானவர்களே வசித்து வருகின்றனர். அதில் இன்று வரை 33 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட சிகிச்சைக்குஅழைத்து சென்றுள்ளனர். இன்று ஒரே நாளில் 15 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த கிராமத்தில் உள்ளவர்கள் அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து கரோனா பரவாமல் தடுக்கும் விதமாக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment