கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகதற்போது வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், கரோனா தடுப்பூசி போடும் முகாம்கள்கடந்த மாதம் ஜனவரி16-ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் 28 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இரண்டாவது டோஸ் செலுத்தப்படுகிறது. 166 மையங்களில் 3,027 பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், 99 பேருக்கு ‘கோவாக்சின்’ தடுப்பூசியும் எனமொத்தம் 3,126 பேருக்குத் தடுப்பூசி போடப்படஇருக்கிறது. தமிழகத்தில் 26 நாட்களில்2.27 லட்சம் பேருக்குக் கரோனாதடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சென்னைராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன்இன்றும் முதல் நபராக இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.