தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738 இருந்து 834 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 27 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 7,267 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 96 பேரில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஈரோட்டில் மொத்தம் 58 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் உள்ளது ஈரோடு. சென்னையில் 163 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மட்டும் ஏழு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் இடத்திலுள்ள திருநெல்வேலியில் 16 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டது இதன்மூலம் தற்போது திருநெல்வேலியில் 56 பேராக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கோவையில் 60 பேருக்கும், திண்டுக்கல்லில் 46 பேருக்கும், நாமக்கல்லில் 41பேருக்கும், திருச்சியில் 36 பேருக்கும், தேனியில் 40 பேருக்கும், செங்கல்பட்டில் 28 பேருக்கும், ராணிப்பேட்டையில் 27 பேருக்கும், திருப்பூரில் 26 பேருக்கும், மதுரையில் 25 பேருக்கும், கரூரில் 23 பேருக்கும், தூத்துக்குடியில் 22 பேருக்கும், விழுப்புரத்தில் 20 பேருக்கும், திருப்பத்தூரில் 16 பேருக்கும் கரோனா உள்ளது. கன்னியாகுமரியில் ஒரே நாளில் எட்டு பேருக்கு கரோனா உறுதி செய்ததன் மூலம் தற்போது 17 ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது.