Skip to main content

“கடைபிடிக்கும் கட்டுப்பாடு பகைவர்களை அச்சுறுத்த வேண்டும்” துவங்கியது சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

 

 

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதன் தோழமை கட்சிகள் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த அனுமதி கோரின. இதனை தொடர்ந்து இரு அமைப்புகளும் பேரணி நடத்த காவல் துறை தடைவிதித்தது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீண்டும் நீதிமன்றத்தை நாடியது. இதன் பின் நவம்பர் 6 ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. 

 

இதனை தொடர்ந்து மதநல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சார்பில் காவல் துறை தலைமை இயக்குநரை சந்தித்து வலியுறுத்தி இருந்தனர்.

 

இதன் பின் அக்.11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியது. கீ.வீரமணி, கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் ஆகியோர் இணைந்து கூட்டாக அறிவிப்பினை வெளியிட்டனர். 

 

இந்நிலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அக்டோபர் 11ம் தேதி தமிழகம் முழுவதிலும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் வாய்ப்புள்ள இடங்களில் ஒன்றினைந்து தோழமைக் கட்சிகளின் உதவியுடன் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி அறப்போர் நடைபெறுகிறது. ஆளும் கட்சி என்கிற முறையில் திமுக இதில் பங்கேற்கவில்லை. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் மனிதச்சங்கிலி அறப்போரில் பங்கேற்க முன் வந்துள்ளன.

 

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆர்.எஸ்.எஸ் ஒரு பாசிச அமைப்பு என்பதை உணர்த்தக்கூடிய வகையில் மதத்தின் பெயரால் சாதியின் பெயெரால் மக்களை பிளவுபடுத்தும் போக்கை ஏற்கமாட்டோம் என்பதை உணர்த்தும் வகையில் மனிதச்சங்கிலி அறப்போர் நடைபெறும். இந்த அறப்போரில் நாம் காட்டும் அமைதி நாம் கடைபிடிக்கும் கட்டுப்பாடும் நம் கொள்கை பகைவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். 

 

இந்நிலையைல் இன்று சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளின் சார்பாக இன்று பல்வேறு இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் நடைபெற்றது. 

 

சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அருகே நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன், மதிமுகவின் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்றனர். எராளமான பெண்களும் தங்களது கைக் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

 

தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இந்த மனித சங்கிலி நிகழ்வானது நடைபெற்று வருகிறது. மொத்தமாக 17 கட்சிகள், 44 இயக்கங்கள் இந்த மனித சங்கிலி நிகழ்வில் பங்கேற்றுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.