Skip to main content

காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி தொடர் முழக்கப் போராட்டம்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

continuous struggle was held demanding the release of Cauvery water

 

சிதம்பரம் வடக்கு வீதி தலைமை தபால் அலுவலகம் எதிரே, தமிழகத்தின் டெல்டா பகுதியில் பாசனத்திற்குத் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் மடிந்து கருகி வருகிறது. இதனால் விவசாயிகளும் மடிந்து வருகிறார்கள். தமிழகத்திற்கான காவிரி தண்ணீரை ஒன்றிய அரசு பெற்றுத் தரக் கோரியும் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசைக் கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

 

இந்த போராட்டத்திற்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயச் சங்க மாவட்டச் செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்கள். இதில் காவிரி டெல்டா பாசன தலைவர் இளங்கீரன் கலந்துகொண்டு போராட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசினார்.  

 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் ராமச்சந்திரன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தமிழ்வாணன், விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் ஸ்டாலின் மணி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ரமேஷ்பாபு, மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் கற்பனைச் செல்வம், கான்சாகிப் பாசன வாய்க்கால் சங்க செயலாளர் கண்ணன், துணைச் செயலாளர் ஹாஜா மொய்தீன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, ‘காவிரியில் கர்நாடகம் சட்ட ரீதியாக வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாகத் திறந்து விட உச்சநீதிமன்றம் அவசர வழக்காக எடுத்து உத்தரவிட வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

 

இதில், விவசாயி பாசன தண்ணீர் இல்லாமல் செத்து மடிவதை விளக்கும் வகையில், விவசாயி ஒருவருக்கு மாலை அணிவித்து போராட்டத்தின் முன்பு அமர வைத்து நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் ஆறுமுக நாவலர் 144-வது குருபூஜை விழா

Published on 08/12/2023 | Edited on 08/12/2023

 

Arumugam Navalar 144th Guru Puja Festival at Chidambaram

சிதம்பரம் மேல வீதியில் ஆறுமுக நாவலர் 144 வது குருபூஜை விழா அவர் தோற்றுவித்த சைவ பிரகாச வித்யாசாலையில் பஞ்சபுராண பாடல்களுடன் நடைபெற்றது. விழாவுக்கு ஆறுமுகநாவலர் பள்ளிக்குழு தலைவர் சேது சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிதம்பரம ஷெம்போர்டு நிறுவனரும் பள்ளியின் முன்னாள் மாணவர் விஸ்வநாதன் மற்றும் பள்ளியின் செயலாளர் அருள்மொழிசெல்வன் பள்ளியின் செயல்பாடு மற்றும் ஒழுக்கம், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள், இந்த பள்ளியில் பயின்று பல்வேறு உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் குறித்து சிறப்புரையாற்றினார்கள். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராம்குமார் அனைவரையும் வரவேற்றார்.

நக்கீரன் சிஎன்சி கைடு நடத்திய பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை ஊடகவியலாளர் அ. காளிதாஸ் வழங்கினார். மேலும் மாநில அளவில் ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் நடத்திய விண்வெளி ஆராய்ச்சி திட்ட மாதிரி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பள்ளிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை தமிழ் ஆசிரியர் செல்வம் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவிகள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக ஞானபிரகாசம் வடக்கு குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழார் கோவிலில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் மருத்துவர் நடராஜன், மரு.பத்மினி கபாலிமூர்த்தி முன்னிலையில் குருபூஜை நிகழ்வு துவங்கி, ஆறுமுக நாவலர் சிலையை, சிதம்பரம் நகரின் முக்கிய தெருக்கள் வழியாக மேல வீதியில் உள்ள ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

Next Story

மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கிய அமைச்சர் 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Minister MRK Panneerselvam gave education loans to students

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகம் முன்னோடி வங்கிகளுடன் இணைந்து மாபெரும் கல்விக்கடன் முகாம் மற்றும் தொழிற்கடன் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். முகாமில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்று மாணவர்களுக்கு கல்விக்கடன் மற்றும் தொழிற்கடனை வழங்கி பேசினார். 

 

அவர் பேசுகையில், “மாணவர்கள் தங்களது உயர்கல்வி அடைவதற்கு பொருளாதாரம் ஒரு மாபெரும் தடையாக உள்ளது. அதனால் மாணவர்களின் உயர்கல்வி கனவு தடைபட வாய்ப்புள்ளது. எனவே மாணவர்கள் நலனின் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கிட அனைத்து கல்லூரிகள் மற்றும் வங்கிகளை ஒருங்கிணைத்து இந்த மாபெரும் கல்விக்கடன் முகாம் நடத்தப்படுகின்றது. இந்த முகாமில் கலந்துகொண்டு கல்விக்கடன் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக கல்விக்கடன் வழங்கிட வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

இன்றைய முகாமில் 153 மாணவர்களுக்கு ரூ.10.84 கோடி கல்விக் கடனும், பல்வேறு அரசு மானியக்கடன் திட்டங்களின் மூலம் 64 பயனாளிகளுக்கு ரூ.10:37 கோடி தொழிற்கடனும், மொத்தம் 217 பயனாளிகளுக்கு 21.21 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது” என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். முகாமில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கெளரிசங்கர் ராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ம. ராஜசேகர், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் க. பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.