வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர், புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீரை வடிக்க பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடர் கனமழையால் சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் என குப்பை கூளமாக காட்சியளிக்கிறது.