Published on 27/07/2021 | Edited on 27/07/2021

தமிழ்நாட்டில் கரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக, தேர்வுகள் நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது கரோனா தொற்று குறைந்துவருவதை தொடர்ந்து, சில மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பதைப் பற்றி பரிசீலனை செய்யப்பட்டுவருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களைப் பள்ளிக்கு அழைப்பது சாத்தியமா? என்று ஆலோசனை செய்யப்பட்டுவருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.