Published on 09/02/2019 | Edited on 09/02/2019
![nuclear plant](http://image.nakkheeran.in/cdn/farfuture/9agr6mIf-c3664bBZ1rC7C4nlhE0Y3l3SjBIcrBVem4/1549704220/sites/default/files/inline-images/zzz6.jpg)
கூடங்குளத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுவுலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வந்துள்ளன.
அணுவுலைகளை அமைக்க அணு உலை அழுத்தத்தை அளவிடும் கருவி, அணு கழிவுகளை கொண்டு செல்லும் குழாய் போன்றவை ரஷ்யாவில் இருந்து வந்துள்ளதாகவும், 15 முதல் 20 சதவிகித உபகரணங்கள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
அதேபோல் மூன்று மற்றும் நான்காவது அணு உலைக்கு உள்நாட்டு உதிரிபாகங்களே அதிக அளவில் பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.