Skip to main content

“மக்கள் சிரமப்படுவதால் இருசக்கர வாகனங்களை அனுமதிக்க வேண்டும்” - அமைச்சரிடம் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

Congress demands should allow two-wheelers Cauvery Old Bridge minister  kn nehru

 

நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும், மாநிலப் பொதுக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் எம்.சரவணன் நேற்று (4.12.2022) நேரில் சந்தித்தார். அப்போது, ஸ்ரீரங்கம் பகுதி மற்றும் புறநகரிலிருந்து நகருக்குள் வந்து செல்லும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் காவிரி பாலத்தை கடந்து செல்வது என்பது மிகவும் ஆபத்தாக உள்ளது என்றும், மக்கள் படும் இன்னல்களைக் கருத்தில் கொண்டு பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் காவிரி பழைய பாலத்தில் உடனடியாக இருசக்கர வாகனங்களை அனுமதிக்க வேண்டும் எனவும், அமைச்சரிடம் பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொண்டார்.

 

மேலும், பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்க இருப்பதை கருத்தில் கொண்டு உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சுவாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளனர். அப்பொழுது இதைவிட பன்மடங்கு போக்குவரத்து நெரிசல் உண்டாகும்.  இன்று ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி நகருக்குள் வருவதற்கு தஞ்சாவூர் சாலை பால்பண்ணை பகுதிக்கு வந்து தான் வர வேண்டியுள்ளது.  எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் சார்பிலும், காங்கிரஸ் கட்சி சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

 

இதையடுத்து அமைச்சர் கண்டிப்பாக இடத்தை நேரில் வந்து பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் ஜி.எம்.ஜி.மகேந்திரன். காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், வஉசி பேரவை வீரேஸ்வரம் சங்கர், ஜங்ஷன் கோட்டம் பிரியங்கா பட்டேல், சோசியல் மீடியா மாநிலத் தலைவர் அபு, வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் கிருபாகரன் பட்டேல், உள்ளிட்ட பல காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.