Skip to main content

நடிகை குஷ்புவுக்கு காங்கிரஸ் கண்டனம்! (படங்கள்) 

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

‘சேரி மொழி’ என நடிகை குஷ்பு பேசியதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. தமிழக காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. துறையின் தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நடிகை குஷ்புவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. துறையின் தலைவர் ரஞ்சன் குமார், தலைமையில் இன்று நடிகையும், பா.ஜ.க. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவின் வீட்டிற்கு முன்பு குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள், அவருக்கு தங்களின் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். பிறகு நடிகை குஷ்புவின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, துடப்பத்தால் அடித்து, பிறகு சாணியை வாரி இரைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாரை போலீஸார் கைது செய்து பேருந்தில் ஏற்றிச் சென்றனர். 

 

Congress condemns actress Khushbu!

 

இந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு, "சேரி மொழி என நான் கூறிய வார்த்தையில் தவறு இல்லை; அதில் தெளிவாக இருக்கிறேன்; செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்" என தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கண்டா வரச் சொல்லுங்க.. கையோடு கூட்டி வாருங்க...! - அதகளப்படும் சிவகங்கை சீமை

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
poster criticizing karti chidambaram has been circulated in Sivaganga

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. 

இதனிடையே தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே சமயம் கடந்த முறை கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட சிவகங்கை, கரூர் உள்ளிட்ட சில தொகுதிகள் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட தொகுதி திமுகவினர் போர் கொடி தூக்கியுள்ளனர். 

கடந்த தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார். ஆனால் அவர் கூட்டணி தொண்டர்களை கண்டுகொள்வதில்லை என்றும், அப்பகுதி மக்களுக்கு எதுவும் பயன் உள்ள வகையில் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சிக்கு சிவகங்கை தொகுதியை ஒதுக்கக்கூடாது என்று தி.மு.க.வினரும், அப்படி ஒதுக்கினால் கார்த்திக் சிதம்பரத்தை வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்றும் அவரது சொந்தக்கட்சியினரே முனுமுனுப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினரால் சிவகங்கை தொகுதி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. கண்டா வரச் சொல்லுங்க... கையோடு கூட்டி வாருங்க...! நெட்ப்ளிக்ஸில் படம் பார்த்துக் கொண்டும், சமூக ஊடகங்களில் மோடியைப் புகழ்ந்து கொண்டும், தொகுதியை மறந்து சுற்றித் திரியும் அவரை(கார்த்தி சிதம்பரம்) கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

Next Story

'சொந்த கட்சி உறுப்பினர்களாலேயே தோற்கடிக்கப்படுவீர்கள்'- வானதி சீனிவாசன் பேச்சு 

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
 'You will be defeated by your own party members' - Vanathi Srinivasan speech

சொந்த கட்சி உறுப்பினர்களாலேயே தி.மு.க தோற்கடிக்கப்படும் என வானதி சீனிவாசன் பேசியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேடையில் பேசுகையில்,''மாநில சட்டப்பேரவையில் கோயம்புத்தூருக்கு ஒரு பெரிய நூலகம் ஒன்று அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவித்து இருந்தார்கள். நேற்று நான் பேசுகின்ற பொழுது 'நிதிநிலை அறிக்கையில் வெறும் நூலகம் என்று அறிவித்திருக்கிறீர்களே அதற்கு எத்தனை கோடி என்று அறிவிக்கவில்லை. எத்தனை காலம் நிர்ணயத்தில் அதை அமைக்க போகிறீர்கள்' என்று கேள்வி கேட்டேன். இன்று மாநிலத்தினுடைய முதல்வர் அவைக்கு வந்து இதற்கு மட்டும் தனியாக ஒரு பதில் கூறிச் சென்றிருக்கிறார்.

நாங்கள் நிச்சயமாக கோவையில் நாங்கள் அதை அமைப்போம். 2026ல் அந்த நூலகம் கட்டும் பொழுது அதன் திறப்பு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினரான நீங்களும் வரவேண்டும் என கூறிவிட்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை நீங்கள் அமைப்பது போல நாங்கள் அமைக்க மாட்டோம் என கிண்டலாக பதில் கூறிச் சென்றிருக்கிறார்.

நாங்கள் கேட்கிறோம் ஒத்த செங்கல்லை வைத்துக்கொண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது வந்தீர்கள். உங்களுக்கு வாக்களித்து மூன்று வருடம் ஆகிறது. அந்த ஒத்த செங்கல்லை வைத்து நீங்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி விட்டீர்களா? மத்திய அரசு எந்த நேரத்தில், எந்த மாதிரி, எந்த திட்டத்தில் எடுத்துக் கொண்டுபோக வேண்டுமோ அந்த முறைப்படி எடுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக ஜப்பானுக்கு சென்று பேசி விட்டு வந்தாகி விட்டது. அதனுடைய பணிகள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதற்கான காலதாமதம் ஏற்கெனவே அவர்களுக்கும் தெரியும். ஆனால் இப்படி இருந்தாலும் கூட இவர்களால் எவையெல்லாம் செய்ய முடியவில்லையோ அந்த பழியை எல்லாம் தூக்கி மத்திய அரசின் மீது போட்டு வசதியாக மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். திமுக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மற்ற எதிர்க்கட்சிகளால் அல்ல, உங்கள் சொந்த கட்சிக்காரர்களால் தோல்வியை தழுவப் போகிறீர்கள். ஏனென்றால் இன்று மக்களுக்கு நீங்கள் நடத்துகின்ற அராஜக ஆட்சி, நீங்கள் நடத்துகின்ற ஊழல் மீது அப்படி ஒரு வெறுப்பு'' என்றார்