Published on 12/11/2022 | Edited on 12/11/2022
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை கடைவீதியில் மழைநீர், கழிவுநீர் செல்லும் வாய்2கால் அமைக்க வேண்டும் என்ற வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கால்வாய் அமைக்கும் பணி சில நாட்களாக நடந்து வருகிறது.
கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் எழுப்பி கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடக்கும் நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பருவமழையால் காலையில் கட்டப்பட்ட கான்கிரீட் சுவர் 10 மீட்டருக்கு மேல் உடைந்து சாய்ந்துள்ளது. தரமற்ற பொருட்களைக் கொண்டு கான்கிரீட் சுவர் கட்டுப்படுகிறதா? அதனால் தான் சுவர் உடைந்ததா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் தான் இது போன்ற தரமற்ற பணிகளைச் செய்கிறார்கள் என்கிறார்கள் பொதுமக்கள்.