Complaints that fracture doctor inselt special people

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் மூலம் உடல்பரிசோதனை செய்து உடலில் உள்ள குறைபாடுக்கேற்ப சதவீத அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்று திறனாளிகளுக்கான அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்.

Advertisment

இந்நிலையில் இன்று வழக்கம் போல நடைபெற்ற மருத்துவமுகாமிற்குத்தாளவாடிக்கோபி பவானி உள்ளிட்டபகுதியில் இருந்துவந்த மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக மருத்துவ பரிசோதனை செய்யவில்லை என்றும் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளைஅலைக்கழிப்பதாகப்புகார் தெரிவித்து அரசு மருத்துவமனை வளாகம் முன்பு 20-க்கும்மேற்பட்டமாற்றத்தினாளிகள்தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதுமலைப்பகுதியிலிருந்துவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பிரச்சனை செய்துமுறையாகச்சான்றிதழும் வழங்கப்படுவதில்லை என்றும் புகார் கூறினர்.

Advertisment

இது குறித்து சுகாதார இணை இயக்குநரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும்எடுக்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டினர். இதற்குப் பின்னர் அரசு மருத்துவமனை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி உடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவித்ததைடுத்து மாற்றுத்திறனாளிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் முறையாக நடத்தப்படுவதில்லை எனப் புகார் கூறி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது