மாவட்ட ஆட்சியர் பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி ஆவணங்களைக் கொண்டு இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்தில் தனது பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி ஆவணங்களைக் கொண்டு இன்ஸ்டாகிராமில் பதிவிடும் நபரை சைபர் க்ரைம் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.