Skip to main content

போடியில் ஓபிஎஸ், டி.டி.எஸ் ஆதரவாளர்களுக்கு இடையே போஸ்டர் யுத்தம்!

Published on 01/08/2021 | Edited on 01/08/2021

 

Competitive OOS, TTS Poster war between supporters!

 

முன்னாள் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்தான் போடி சட்டமன்றத் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். இருந்தாலும் ஒபிஎஸ்சை எதிர்த்து போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய திமுவை சேர்ந்த தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ் செல்வன்தான் தொகுதி மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு ஆக்டிங் எம்.எல்.ஏ.வாக தொகுதியில் செயல்பட்டு வருகிறார். 

 

Competitive OOS, TTS Poster war between supporters!

 

அதைக்கண்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்க தமிழ்ச்செல்வன் மேல் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போடியில் ஆளும் கட்சியை எதிர்த்து ஒபிஎஸ் நடத்திய கண்டன போராட்டத்தின் போது தங்கதமிழ்செல்வனை தாக்கி பேசியதுடன் மட்டும்மல்லாமல் தகரம் என்றும் ஒ.பி.எஸ்.கிண்டல் அடித்து பேசினார். அதைத்தொடர்ந்து போடியை சேர்ந்த சரவண நதி மற்றும் நகர அதிமுக சார்பில் தங்கதமிழ்ச் செல்வனை வன்மையாக கண்டிக்கிறோம் என ஜெ.கையில் வால் இருப்பது போல் பெரிய படத்துடன் ஒபிஎஸ்-இபிஎஸ் மற்றும் ஒபிஆர் படங்களையும் போட்டு "அம்மாவின் அரசியல் வாரிசு, மூன்று முறை தமிழக முதல்வர் போடி கண்டெடுத்த பொக்கிஷம், போடியை சொர்க்க பூமியாக மாற்றிய ஏலம் மணக்கும் போடியின் காவலர் ஓ.பன்னீர் செல்வம், கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவரை தனி மனித நாகரிகம் தெரியாமல் அவதூறாக பேசிய மூன்று கட்சி மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்ச் செல்வனை வன்மையாக எச்சரிக்கையுடன் கண்டிக்கிறோம்" என நகர் முழுவதும் கண்டன போஸ்டரை ஒட்டினார்கள்.

 

Competitive OOS, TTS Poster war between supporters!

 

Competitive OOS, TTS Poster war between supporters!

 

இந்த விஷயம் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளரான போடி முன்னாள் நகர செயலாளர் ரமேஷ் பாபு காதுக்கு எட்ட, அதேபோல் கையில் வாலுடன் முதல்வர் ஸ்டாலின் படத்தை போட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் டிடிஎஸ் படத்தையும் போட்டு "மிக வன்மையாக கண்டிக்கிறோம், தர்மயுத்தம் என்று சொல்லி தமிழக மக்களை ஏமாற்றிய சுயநலவாதி ஓ.பன்னீர்செல்வம், போடி தொகுதியில் மக்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் எங்கள் தங்கம் என்றும் தங்கமே''என போஸ்டர்  அடித்து நகர் பகுதி மட்டும்மல்ல தொகுதி முழுவதும் ஒட்டியுள்ளனர். இப்படி ஓபிஎஸ்,டிடிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்று வரும் வால் போஸ்டர் உத்தம் தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.