தமிழக அரசு சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மத்திய மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில், இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான நா.புகழேந்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்குச்சீர் வழங்கினார். ஒன்றிய ஊராட்சி குழுத் தலைவர் சங்கீதா அரசி ரவி துரை, குழந்தைகள் வளர்ச்சி வட்டார அலுவலர் சாமுண்டீஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.