Skip to main content

தினேஷ் குடும்பத்தினருக்கு முத்தரசன் நேரில் ஆறுதல்..!

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
Communist Mutharasan personally consoled Dinesh family

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்தவர் டி.வி.ரவி. இவரது மகன் இரா.தினேஷ்குமார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மை தனிச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தினேஷ்குமாரின் தந்தை ரவி உடல் நலக்குறைவால் சென்ற 12 ந் தேதி இரவு காலமானார்.

இதையடுத்து, தமிழக முதல்வர்  ஸ்டாலின் நேற்று (14.5.2024) காலை தினேஷ் குமாரின் இல்லத்திற்கு சென்று மறைந்த அவரது தந்தை ரவியின் படத்திற்கு மலர் மரியாதை  செய்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டுசென்றார். தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தமிழக அமைச்சர்கள் திமுகவின் மூத்த நிர்வாகிகள் என பலரும் நேரில் வந்து தினேஷ் குமாருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு செல்கிறார்கள்.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று இரவு தினேஷ்குமாரின் இல்லத்திற்கு நேரில் வந்து மறைந்த அவரது தந்தையின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செய்ததோடு தினேஷ் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு சென்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

மனைவியைப் பிரிந்த கணவர் மரணம்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
husband who separated from his wife passed away

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (49). இவரது மனைவி தமிழ்செல்வி (39). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வெங்கடாசலம், மனைவி குழந்தைகளுடன் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே உள்ள பழையபாளையத்தில் வசித்து வந்தார். அவ்வப்போது கிடைக்கும் வேலைகளுக்கு சென்றுவந்த வெங்கடாசலத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தமிழ்ச்செல்வி தனது குழந்தைகளுடன் கணவரைப் பிரிந்து சென்று கரூரில் தங்கி அங்குள்ள மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.  மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றதால் மனவேதனையடைந்த வெங்கடாசலம் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்துள்ளார். நேற்று முன் தினம் இரவு, வீட்டின் வெளியில் இருந்த கட்டிலில் பேச்சு மூச்சின்றி வெங்கடாசலம் கிடந்துள்ளார்.

இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே வெங்கடாசலம் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து, தமிழ்ச்செல்வி நேற்று அளித்த புகாரின் பேரில், அரச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

'திமுக வெற்றிக்காக பாடுபடுவோம்' -முத்தரசன் பேட்டி

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
nn

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக இந்த இடைத் தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், ''குவைத்தில் நடந்த தீ விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில், மத்திய அரசு ரூ.2 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளது. அதை ரூ.25 லட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும். நீட் தேர்வில் நடைபெற்ற ஏராளமான குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கும். திமுக வெற்றிக்காக பாடுபடுவோம். வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வனத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து, தற்பொழுது பட்டுப்போன மூங்கில் மரங்களை வனப்பகுதியில் வாழும் பழங்குடியினரே அதனை எடுத்துச் செல்ல வனத்துறை அனுமதிக்க வேண்டும்'' என்றார்.