'Common people do not come forward to testify'-Chennai court opined

மக்கள் சமூக அக்கறையுடன் நீதிமன்றங்களில் சாட்சியம் அளிக்க வருவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Advertisment

கடந்த 2006 ஆம் ஆண்டு சிறுமிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் பழனி, ஜெயக்குமார், மணி பாரதி, கோபிநாத் ஆகிய நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட10 ஆண்டு சிறை தண்டனையை மூன்று ஆண்டுகளாக குறைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 4 பேருக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் சார்பில் விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைத்து உத்தரவிட்டார் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன். பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் 'குற்ற வழக்குகளில் புலன் விசாரணைக்கு பொதுமக்கள் சாட்சி சொல்ல முன்வருவதில்லை பொது நலனில் அக்கறை கொண்ட சிலர் மட்டுமே சாட்சி சொல்ல வருகின்றனர்' என்று தெரிவித்தார்.