






தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன் கரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் அதிகளவில் இருந்தது. தொற்று பரவலின் எண்ணிக்கையும், தொற்று பாதித்தவரக்ளின் மரணங்களும் அதிகளவில் இருந்தன. இதில் முன்களப் பணியாளர்களான காவல்துறையினரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு மரணங்களும் நிகழ்ந்தன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த 19 காவல் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.
சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இன்று மதியம் 02.45 மணியளவில், கடந்த சில மாதங்களில் கொரோனா பெருந்தொற்றால் இறந்த சென்னை பெருநகர காவல் ஆளிநர்களின் குடும்பத்தினர் முன்னிலையில், இறந்த 19 காவல் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினார்கள்.