சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 214- வதுநினைவு தினத்தையொட்டி,சென்னை- கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, மூத்த வழக்கறிஞர் காந்தி உள்ளிட்டோரும், தீரன் சின்னமலை சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisment

Commemoration of Freedom Fighter Theeran Chinnamali  Chief Minister Edappadi Palanisamy, Deputy Chief Minister

சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையில் உருவப்படத்திற்கு, பல்வேறு தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் மலர் தூவி, மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்துசங்ககிரி மலைக்கோட்டையில் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள உருவப்படத்திற்கு அமைச்சர் தங்கமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை நினைவுச் சின்னத்திலும் அமைச்சர் தங்கமணி மரியாதை செலுத்தினார்.