Skip to main content

''வாருங்கள் சீக்கிரம்...''-இசையமைப்பாளர் இளையராஜா ட்வீட்

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

'' Come soon ... '' - Composer Ilayaraja tweeted

 

நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த சில நாட்களாக இருமல், சளி இருந்ததால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நடிகர் கமலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட சக நடிகர்கள் கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தனர்.

 

'' Come soon ... '' - Composer Ilayaraja tweeted

 

இந்நிலையில் அவருடன் பல படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய இசையமைப்பாளர் இளையராஜா, கமலின் உடல் நலம் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ''நலமாக வரவேண்டும் சகோதரரே; கலை உலகை ஆ……….ஹா…………என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ச்சைக்கு பிரெஞ்சு மொழியில் புது விளக்கமளித்த குஷ்பு

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

nn

 

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர் பேசியதாவது, லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 

அந்த வகையில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இந்த விவகாரத்தை மகளிர் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். பின்பு தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு பரிந்துரை செய்தது. அதன்படி மன்சூர் அலி கான் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

 

இந்தநிலையில் குஷ்பு, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒருவர் குஷ்பு-வை டேக் செய்து, அப்போது ஏன் மகளிர் ஆணையம் வரவில்லை என குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த குஷ்பு, “ஒரு பெண்ணை அவமதிக்கும் விதமாக தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இது தான் திமுக-காரர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது. ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைக் காட்ட முடியும். மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்பிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது. உங்களைப் போன்ற முட்டாள்கள் ஸ்டாலினை சுற்றி இருப்பது அவருக்கு அவமானம்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர்களை போல இருக்கும் முட்டாள்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என மு.க ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.

 

குஷ்பு தனது பதிவில் சேரி மொழி என பயன்படுத்தியுள்ளது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நடிகை குஷ்பு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் 'பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன். பிரஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்’ என விளக்கம் அளித்துள்ளார்.

 

 

 

Next Story

இளையராஜாவாக நடிக்கும் தனுஷ் - வேகமெடுக்கும் பயோ-பிக்

 

ilaiyaraaja biopic update

 

இயக்குநர் பால்கி, கடந்த சில மாதங்களுக்கு முன், ஒரு ஆங்கில இணையதளத்தில் இளையராஜா பயோ பிக் உருவாக ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். அந்த பேட்டியில், "இளையராஜாவின் வாழ்க்கை கதையை தனுஷை வைத்து படமாக எடுப்பது என் கனவு. 3 தசாப்தங்களாக இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என 1000 படங்களுக்கு மேல் பின்னணி இசையமைத்த இளையராஜா போல் தனுஷின் முகம் இருக்கும்.

 

லண்டன் பில்ஹார்மோனிக் இசைக்குழுவிற்காக சிம்பொனியை வாசித்த முதல் ஆசிய நபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. தனுஷ் மேஸ்ட்ரோவாக நடிப்பது எங்கள் இருவருக்குமே கனவு நினைவாகும் தருணம். மேலும் தனுஷின் 40வது பிறந்தநாளில், இந்த படத்தை நான் எடுத்தால், அது தனுஷுக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய பரிசாக இருக்கும். ஏனென்றால் என்னைப் போலவே ராஜா சாரின் மிகப்பெரிய ரசிகர்களில் அவரும் ஒருவர்" என்றார். 

 

இந்த நிலையில் இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அக்டோபரில் தொடங்கவுள்ளதாகவும் 2025 நடுவில் வெளியாகவுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குரூப் என இரண்டு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கவுள்ளனர். இயக்குநர் பற்றி எந்த விவரமும் குறிப்பிடவில்லை. விரைவில் அது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.