

Published on 19/06/2021 | Edited on 19/06/2021
பணிக்காக காத்திருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முதல்வரை சந்திப்பதற்காக ரோட்டின் ஓரமாக காத்திருந்தனர். அந்த நேரத்தில், அண்ணா நூலகத்தில் விழா முடிந்து தலைமைச் செயலகம் சென்றுகொண்டிருந்த முதல்வரின் காரைப் பார்த்து ஆசிரியர்கள் மனுவைக் காட்டினார்கள். அப்போது காரை நிறுத்தச் சொல்லி அவர்களிடம் மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர், “ரோட்டில் வைத்து இதைப் பேச வேண்டாம் தலைமைச் செயலகம் வந்து பாருங்கள்” என கூறிச் சென்றார்.