/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/997_103.jpg)
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிரபாகரன்(48) - கங்கையம்மாள்(42) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹரிகிருஷ்ணன்(21), பாலகிருஷ்ணன்(19) என இரு மகன்கள் உள்ளனர். அதில் பாலகிருஷ்ணன் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கூலி வேலைசெய்து வந்த பிரபாகரன் ஒரு கட்டத்தில் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால்கணவன் மனைவி இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை மகன் பாலகிருஷ்ணன் சமாதானம் செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பிரபாகரனுக்கும், கங்கையம்மாளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாகத்தெரிகிறது. அப்போது பிரபாகரன் கத்தியை வைத்து இருவரில் ஒருவர்தான் உயிருடன் இருக்க வேண்டும் என்று கூறி கங்கையம்மாளிடம்சண்டை போட்டுள்ளார். இதனால்மனமுடைந்த மகன்பாலகிருஷ்ணன், "நீங்கள் சண்டை போடுவதுஎங்களுக்கு அசிங்கமாஇருக்கு, நீங்க யாரும் சாக வேண்டாம், நான் சாகிறேன்" என்று கூறி பிரபாகரன் வைத்திருந்த கத்தியைப் பிடுங்கி தன்னையே குத்திக்கொண்டார்.
இதையடுத்து பதறிப்போன அவரது பெற்றோர் பாலகிருஷ்ணனை மீட்டுஅருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரைபரிசோதித்த மருத்துவர்கள் பாலகிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத்தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)