Skip to main content

வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்!  

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Collector who inspected the work of clearing the canal!

 

சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள சிவகாமி சுந்தரி வாய்க்கால் 2.5 கி.மீ நீளத்திற்கு ரூ. 11 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளது. இதனை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் நீர்வளத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள உசுப்பூர் வாய்க்கால்  3.5 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ 4 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது, “கடலூர் மாவட்டத்தில் 122 பாசன வாய்க்கால்கள், 31 வடிகால் வாய்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 58,655 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் தரும் என்பதால் இப்பணிகளை விரைந்து முடித்து விவசாய பெருமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்” என்றார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை  செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் பாலமுருகன், அருணகிரி, உதவி பொறியாளர்கள் குமார், ரமேஷ், முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.