coimbatore traffic police video goes viral

கோவை மாவட்டம் எல்ஐசி பஸ் ஸ்டாப்பில் டிராபிக் போலீஸ் பூத் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் பணியாற்றி வரும் டிராபிக் போலீஸ் ஒருவர்கோவை தமிழில் அழகிய அறிவுரைகளை வழங்கியபடியேவாகன ஓட்டிகளை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில்அந்த டிராபிக் போலீஸ் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisment

அந்த வீடியோவில் “வண்டி எண் 4724 ல இருக்குற தம்பிநல்ல அழகா சிரிக்கிறடாராஜா...நிறைய சாங்ஸ் கேளுடா...” என மகிழ்ச்சியுடன் பேசி வாகன ஓட்டிகளை சந்தோஷப்படுத்தினார். அப்போதுஅங்கிருந்த இளைஞர் ஒருவர்ஹெல்மெட் போடாமல் பைக்கை ஓட்டி வந்துள்ளார்.

Advertisment

இதை கவனித்த டிராபிக் போலீஸ் “டேய் பொடியா ஹெல்மெட் போடு டா... இதுலாம் ரூல்ஸ் டா... உங்க சேஃப்டிக்காகஃபாலோ பண்ணுங்க. அப்பா அம்மாவுக்கு தெரியாம பைக் எடுத்துட்டு சுத்துறீங்களா...” என்று மிக இயல்பாய் அந்த இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்துவாகன நெரிசலில் சிக்கிய சில வாகன ஓட்டிகளிடம் ” முன்னாடி வாங்க, கொஞ்ச நேரத்துல சிக்னல் ஓபன் ஆய்டும்...” என்று பண்புடன் தெரிவித்துள்ளார்.

இதனை அங்கிருந்த நபர் ஒருவர்செல்போனில் படமெடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்ட நிலையில்அது தற்போது வேகமாக பரவி வருகிறது. அதை பார்த்த இணையவாசிகள்அந்த டிராபிக் போலீஸுக்கு பாராட்டுக்களைதெரிவித்து வருகின்றனர்.