Skip to main content

ராஜேஸ்வரிக்கு திமுக சார்பில் ரூபாய் 5 லட்சம் நிதியுதவி!

Published on 17/11/2019 | Edited on 17/11/2019

அதிமுக கொடிக்கம்பம் விழுந்து லாரி மோதி கால் இழந்த ராஜேஸ்வரிக்கு திமுக சார்பில் ரூபாய் 5 லட்சம் நிதியுதவி. கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்வரியை சந்தித்து, ஆறுதல் கூறியபின் நிதியை வழங்கினார் ஸ்டாலின். 

COIMBATORE INCIDENT DMK PRESIDENT MK STALIN MEET RAJASHWARI AT HOSPITAL


அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், "கோவையில் கொடிக்கம்பம் விழுந்து பெண் கால் இழந்த நிலையில் அதை வைத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை. கொடிக்கம்பம் விழுந்து பெண் பாதிக்கப்பட்ட நிலையில் லாரி ஓட்டுநர் மட்டுமே கைது. விழா ஏற்பாட்டாளர்களையும், அதிமுகவினர், கொடிக்கம்பங்களை நட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை. சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ இறந்த நிலையில் கோவையில் மற்றொரு பெண் பாதிக்கப்பட்டுளளார். கொடிக்கம்பம் விழுந்ததால் பெண் பாதிக்கப்பட்டதை மறைக்க அதிமுகவினர் முயற்சி என ஸ்டாலின் குற்றம்சாட்டினார் மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு பக்க பலமாக இருக்க வேண்டும் என்று உருக்கத்துடன் கேட்டுக்கொண்டார்". 

COIMBATORE INCIDENT DMK PRESIDENT MK STALIN MEET RAJASHWARI AT HOSPITAL

மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், "அதிமுக கொடிக் கம்பம் சரிந்ததால் விபத்துக்குள்ளாகி, கால்கள் அகற்றப்பட்டுள்ள ராஜேஸ்வரிவுக்கு ஆறுதல் கூறினேன். திமுக சார்பில் நிதியுதவி வழங்கி, அவருக்கு செயற்கைக் கால் பொருத்தவும் உதவப்படும் என உறுதியளித்தேன். அதிமுக சார்பில் ஆறுதல் கூட இல்லை; இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடாது! என குறிப்பிட்டுள்ளார்". 



 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பிரிட்டன் மீண்டு வரும்” - கெய்ர் ஸ்டார்மர் உரை!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Britain will come back to live up to the people's faith Keir Starmer speech

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பின்பு நேற்று (04.07.2024) நடைபெற்றது. மொத்தம் 650 மக்களவை இடங்கள் இருக்கும் நிலையில் பெரும்பான்மை வெற்றி பெற 326 தொகுதிகள் வேண்டும் என்ற நிலை உள்ளது. இத்தகைய சூழலில் இன்று (05.07.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 412 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேநேரம் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 121 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்துள்ளது.

இதனால் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக்கின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த பெரும் பின்னடைவு அக்கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதற்கிடையே பிரதமராக புதிதாக பதவியேற்க உள்ள கெய்ர் ஸ்டார்மருக்கு ரிஷி சுனர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதற்கிடையே பிரிட்டனின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மரை அதிகாரப்பூர்வமாக மன்னரின் மாளிகை அறிவித்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அறிவிப்பில் பிரதமராகப் பதவியேற்க வருமாறு ஸ்டார்மருக்கு மன்னர் 3ஆம் சார்லஸ் அழைப்பு விடுத்துள்ளார். 

Britain will come back to live up to the people's faith Keir Starmer speech

இந்நிலையில் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்க உள்ள கெய்ர் ஸ்டார்மர் தனது முதல் உரையை ஆற்றினார். அதில், “மாற்றத்திற்கான பணி உடனடியாகத் தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை, நாங்கள் பிரிட்டனை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்பதில் சந்தேகமில்லை. புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும். மாற்றத்திற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே மக்களின் அந்த நம்பிக்கைக்கு ஏற்ப பிரிட்டன் மீண்டு வரும். ஆட்சி அமைக்குமாறு மன்னர் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டேன். நாம் ஒற்றுமையாக சேர்ந்து முன்னேற வேண்டும். எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து சேவை செய்வேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

இளம்பெண்ணைக் கொலை செய்து எரித்த கொடூர குடும்பம்; விசாரணையில் திடுக் தகவல்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
A family who incident a teenage girl for love marriage

ராஜஸ்தான் மாநிலம், ஜலவார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷிம்லா குஷ்வாஹா (20) எனும் இளம்பெண். இவர் ரவீந்திர பில் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ஷிம்லாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் விருப்பத்தை மீறி ஷிம்லா, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பில்லை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அப்பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதை அறிந்த காதல் தம்பதி, மத்தியப் பிரதேசம் என பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில். தம்பதி இருவரும் பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றுள்ளனர். இதை அறிந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் அந்த பெண்ணை, கணவரின் கண் முன்னே காரில் கடத்தி சென்றுள்ளனர். இதில் பதற்றமடைந்த கணவர் ரவீந்தர பில், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரி்ல், போலீசார் விசாரணை நடத்தியதில், ஷ்மிலாவை அவரது குடும்பத்தினரே கொலை செய்து சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தலைமறைவாக இருக்கும் ஷிம்லாவின் குடும்பத்தினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெற்றோர் விருப்பத்திற்கு மீறி திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணை அவரது குடும்பத்தினரே கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.