coimbatore district husband and wife incident police investigation

Advertisment

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் எஸ் ஐ எஸ்.எஸ். காலனி நாராயணசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. கட்டிடத்தொழிலாளியான இவருக்கு மாதவி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், பழனி தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நான்கு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதேசமயம், பழனி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதன் காரணமாக, அடிக்கடி குடித்து விட்டு வந்து குடும்பத்தாருடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் (12/09/2021) இரவு குடிபோதையில் வந்த பழனி மனைவியிடம் சாப்பிட எதாவது கொடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது பழனிக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது .

இதைத் தொடர்ந்து மாதவி தோசையை ஊற்றி பழனிக்குச் சாப்பிடக் கொடுத்தார். அதில் ஒரு தோசை கருகிய நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து பழனி மனைவி மாதவியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஆத்திரமடைந்த பழனி வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு மின்விசிறியில் வேட்டியைக் கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வீட்டிலுள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் பழனி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்துத்தகவலறிந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.