Skip to main content

கோவை மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020


 

coimbatore district coronavirus  peoples

 

கரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய போது கோவை மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 

 

பின்னர் படிப்படியாகக் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. மேலும் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாகக் கோவை மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்து அமல்படுத்திய நிலையில், மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர். இந்த நிலையில் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. 

 

கோவை மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம், வடவள்ளி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அந்தப் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனிடையே சென்னையிலிருந்து பொள்ளாச்சி அருகே உள்ள நடுப்புணி கிராமத்திற்கு வந்த தந்தை மூலம் 3- வயது பெண் குழந்தை உள்பட 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

அதேபோல் பொள்ளாச்சி அருகேயுள்ள சமத்தூர் பகுதியில் 70 வயது முதியவருக்கும், ஆனைமலை சுங்கம் பகுதியில் 67 வயது முதியவருக்கும், பொள்ளாச்சி சுப்பேக்கவுண்டன்புதூர் பகுதியில் 87 வயது முதியோருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பொள்ளாச்சியும் சிவப்புப் பகுதிகளாக அறிவிக்கப்படும் என பொள்ளாச்சி மக்கள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்