Skip to main content

தொழிலதிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி; பல் மருத்துவர் கைது

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

coimbatore businessman durkey apple buying incident involved dentist 

 

தொழிலதிபரிடம் நூதன முறையில் பணம் பறித்து சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). ஏற்றுமதி, இறக்குமதி தொழிலதிபரான இவருக்கு சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவரான அரவிந்த் (வயது 33) என்பவருடன் அறிமுகம் கிடைத்துள்ளது. இந்நிலையில் தொழிலதிபரான ரமேஷுக்கு தொழிலில் உதவிடும் வகையில் துருக்கியில் இருந்து குறைந்த விலைக்கு கண்டெய்னர் மூலம் ஆப்பிள்களை வாங்கித் தருவதாக அரவிந்த் கூறியுள்ளார். இதனை நம்பிய ரமேஷும் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் அரவிந்த்துக்கு பல்வேறு தவணைகளாக ஒரு கோடியே 24 லட்சம் ரூபாயைக் கொடுத்துள்ளார்.

 

பணத்தை வாங்கிய அரவிந்த், ரமேஷுக்கு கூறியபடி ஆப்பிள்களை அனுப்பவில்லை. மேலும் கொடுத்த பணத்தைத் திருப்பிக்கேட்டபோது காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட ரமேஷ் இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகாரளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அரவிந்தை கைது செய்ததுடன், இந்த மோசடி சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த அரவிந்தின் மனைவி துர்கா பிரியா மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின் தொடர் விசாரணையில் மோசடி செய்த பணத்தைக் கொண்டு அரவிந்த் சினிமா நிறுவனம் ஒன்றைத் தொடங்கி படம் எடுக்க முயன்றது தெரியவந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்