சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற சவுத் ஸ்போர்ட்ஸ் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தென்னிந்தியாவில் விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. உரிய நடவடிக்கை எடுத்த காரணத்தால்தான் அந்த வாய்ப்பு சென்னைக்கு கிடைத்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடப்பது இதுதான் முதன்முறை. முதல்முறையே தமிழ்நாட்டில் நடக்கிறது என்பது நமக்கு மகிழ்ச்சி. விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என உலகம் முழுவதும் இருந்து 2,500 பேர் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் சர்வதேச அளவில் உற்றுநோக்கக் கூடிய மாநிலமாக தமிழகம் மாறப்போகிறது. செஸ் ஒலிம்பியாட்டிற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ள நேரத்தில் இந்த மாநாடு நடப்பது பொருத்தமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.