/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-6_322.jpg)
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதிபிரதான சாலையில் உள்ள இந்தியா ஒன் மற்றும் எச்.டி.எப்சி என அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களை, கொள்ளையர் ஒருவர் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்து ஏடிஎம் மையங்களின் கதவுகளை உடைத்து திருட முயன்று தோல்வியடைந்துள்ளது.வெளியே வந்த பார்த்து சிசிடிவியில் தனது முகம் பதிவானதை அறிந்து கேமராவை உடைத்து சென்றுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_618.jpg)
இதுகுறித்து வங்கியின் நிர்வாகத்தரப்பிலிருந்து புகார் ஏதும் எழாத நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் நபரின் முகம் தெளிவாகப் பதிவானதைத்தொடர்ந்து இவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)