s vengadesan

Advertisment

மத்திய தொல்லியல் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ்மொழிக்கு இடம் இல்லை என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், உத்தரப்பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ளதொல்லியல் கல்லூரியின், முதுகலைபட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் விளம்பரத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பண்டைய அல்லது இடைக்கால இந்திய வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகியவற்றின் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவற்றில் சமஸ்கிருதம், அரபு அல்லது பாரசீக மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், செம்மொழி அந்தஸ்து உள்ள தமிழ் மொழி இடம்பெறவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.