
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்து நிலையத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும்வீடியோவெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில்படிக்கட்டில் தொங்கியபடிபயணிப்பதில் பள்ளி மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பேருந்து நிறுத்தத்திலேயே இரு தரப்பு மாணவர்களும் மோதிக்கொண்டனர். இந்தக் காட்சிகளைப்பேருந்துக்குக்காத்திருந்த சிலர்வீடியோ காட்சிகளாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாகபோலீசார்விசாரணை நடத்திய நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அழைத்து காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். நேற்று முன்தினம் (14.10.2021) சிதம்பரத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவரை மூர்க்கத்தனமாகத் தாக்கும்வீடியோவெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)