Clash between school students in Tuticorin

தூத்துக்குடி மாவட்டம், பாளையங்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் இரு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் முற்றியுள்ளது. அதே சமயம் இருவரும் ஒரே டியூசனில் பயின்று வரும் நிலையில் அங்கேயும் அடிக்கடி முட்டிக்கொண்டுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் தனது நண்பர்களான கல்லூரி மாணவர்கள், சக பள்ளி மாணவர்கள் என 12 பேரை அழைத்து வந்து மோதிக்கொண்டனர். இந்த சண்டையில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குமே பலத்த காயம் ஏற்பட்டு, இருவருக்குமே வாளால் வெட்டு விழுந்துள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து 2 மாணவர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாக்கப்பட்ட ஒரு மாணவரின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரின் 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.