/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-4_135.jpg)
மாநகரப் பேருந்துகளை ஓட்டுநரைத்தவிர வேறு யாரும் இயக்கக் கூடாது என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நமது மாநகரப் போக்குவரத்துக் கழக கிளைகளில் ஒரு சில இடங்களில் நடத்துநர்கள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இயக்குவதாகத்தெரிய வருகிறது. மத்திய பணிமனையில் 28.01.2023 அன்று நடத்துநர், ஓட்டுநருக்குப் பதிலாகப் பேருந்தினை எடுத்து டீசல் பங்கினை இடித்து சேதமேற்படுத்தியுள்ளது இதனை உறுதி செய்கிறது.
எந்த சூழ்நிலையிலும் ஓட்டுநரைத்தவிர மற்றவர்கள் பேருந்தினை பணிமனை உள்ளே மற்றும் வெளியே கண்டிப்பாக இயக்கக் கூடாது. கிளை மேலாளர்கள் மற்றும் பணியிலுள்ள மேற்பார்வையாளர்கள் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படா வண்ணம் கண்காணிக்க வேண்டும். கிளை மேலாளர்கள் உரிய தகவலை ஓட்டுநர், நடத்துநர் மற்றும் அனைவரும் அறியும் வண்ணம் தகவல் பலகையில் ஒட்டவும், தொடர் முயற்சியாகப் பயிற்சி பள்ளிக்குவரும் அனைவருக்கும் தெரியப்படுத்த இச்சுற்றறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)