/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/994_8.jpg)
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிஐடியு மற்றும் அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் அனைத்து மண்டல தலைமை அலுவலகங்களில் இன்று முற்றுகை போராட்டம் நடந்தது. அதில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஒப்பந்த நிலுவைத் தொகை, கரோனா நிதி ஆகியவற்றை வழங்கிட வேண்டும். ஒப்பந்த பலன்களை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்கிட வேண்டும். ஒப்பந்த பலன்களை வழங்கி, ஓய்வூதிய உயர்வு வழங்கிட வேண்டும். பணி ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற, மரணம் அடைந்த தொழிலாளர்களின் ஓய்வுக்கால பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு மத்திய சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைத் தலைவர் ரங்கராஜன் துவக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் கருணாநிதி, ஓய்வு பெற்ற பணியாளர் நலச் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சண்முகம், மாநில துணைத்தலைவர் சின்னசாமி, பொருளாளர் சிங்கராயர், துணைத் தலைவர் சண்முகம், துணைப் பொதுச் செயலாளர் மாணிக்கம் ,துணைப் பொதுச் செயலாளர் முருகன், துணைப் பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன், துணைப் பொதுச் செயலாளர் அசோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)