Skip to main content

சனாதனம் குறித்த சுற்றறிக்கை; வாபஸ் பெற்ற கல்லூரி நிர்வாகம்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

 Circular on Sanatanam; The college administration withdrew

 

அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி பேசியதிலிருந்து சனாதனம் குறித்த பேச்சுக்கள் பேசுபொருளாகியிருக்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நேற்று திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில், மாணவர்கள் சனாதனத்தை எதிர்த்து கருத்துக்களைப் பேச வேண்டும் எனக் கல்லூரி முதல்வர் மாணவர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, சனாதன எதிர்ப்பு குறித்த கருத்தரங்கு ஒன்று திமுக சார்பில் நடைபெற இருக்கிறது. இதில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.

 

இதனையொட்டி திருவாரூரில் செயல்பட்டு வரும் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜாராம் அனைத்து துறைத் தலைவர்களுக்கும், வகுப்பில் மாணவர்களிடம் வாசிக்கும்படி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் 'கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சனாதன எதிர்ப்பு பற்றிய தங்கள் ஆழ்ந்த கருத்துக்களை அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று மாலை 3 மணி அளவில் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டது.

 

 Circular on Sanatanam; The college administration withdrew

 

அது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 'எதிர்ப்பு' என்ற வார்த்தை மட்டும் நீக்கப்பட்டு மீண்டும் சுற்றறிக்கை கொடுக்கப்பட்டது. இதற்கான விளக்கமும் கல்லூரி தரப்பு கொடுத்திருந்தது. இந்தநிலையில் சனாதனம் குறித்து அனுப்பப்பட்ட இரண்டு சுற்றறிக்கைகளையும் வாபஸ் பெறுவதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

'இது உலக அரங்கில் தமிழகத்திற்கு அவப்பெயர்' - பாமக அன்புமணி வேதனை

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

'This is a bad name for Tamil Nadu on the world stage'-Pmk Anbumani Angam

 


திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின் தடையால் நோயாளி இறந்த சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட மின்தடையால், அம்மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவிகள் (வெண்டிலேட்டர்கள்) செயலிழந்ததால், நுரையீரல் தொற்றுக்காக மருத்துவம் பெற்று வந்த அமராவதி என்ற பெண் நோயர் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும்  குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தொடக்க நிலை, இரண்டாம் நிலை ஆகியவற்றைக் கடந்து மூன்றாம் நிலை மருத்துவ சேவைகளை வழங்கக்கூடியவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகும். அவற்றின் அவசர சேவைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதால், அங்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால்,  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்டது மட்டுமின்றி, மாற்று  ஏற்பாடுகளும் செயலிழந்து விட்டதால் நோயாளி ஒருவர் உயிரிழந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. மருத்துவத்துறையில் தமிழ்நாடு வளர்ந்து விட்டதாக நாம் பெருமை பேசி வரும் நிலையில், இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பது பெரும் அவலம் ஆகும்.

 

மின்சாரத் தடையால் நோயாளி உயிரிழந்ததை விடக் கொடுமை, அதை மூடி மறைக்க நடைபெறும் முயற்சிகள் தான். மின்சாரம் தடைபடவில்லை; மருத்துவமனையில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மின்சார விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு தான் இதற்கு காரணம் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், மருத்துவமனையின் முதல்வரோ,  மின்தடை  ஏற்பட்டாலும் பேட்டரி உதவியுடன் செயற்கை சுவாசக் கருவிகள் இயங்கின; அதனால், நோயாளியின் உயிரிழப்புக்கு மின்தடை காரணமல்ல என்று கூறி அனைத்தையும் மூடி மறைக்க முயல்கிறார். இவற்றில் எது உண்மை எனத் தெரியவில்லை.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு வளர்ந்து நிற்கும் சூழலில், மின் தடையால் நோயாளி இறந்தார் என்பது உலக அரங்கில் தமிழகத்திற்கு பெரும் அவப்பெயரை பெற்றுக் கொடுக்கும். மருத்துவமனையில் நடந்த குளறுபடிகள், நோயாளியின் உயிரிழப்பு, அதற்கு காரணமானவர்கள் யார்? என்பது குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இனியும் இத்தகைய நிகழ்வுகள் நடக்காத அளவுக்கு மருத்துவக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும். மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி அமராவதி குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ஐ.சி.யூவில் மின்தடை? அரசு மருத்துவமனையில் அவலம் - பலியான பெண் 

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Annamalai condemns woman passed away in Tiruvarur government hospital

 

மயிலாடுதுறையை சேர்ந்த அமராவதி என்ற பெண்மணி நுரையீரல் பிரச்சனை காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அமராவதிக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால், வெண்டிலேட்டர் மூலர் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. 

 

இந்த நிலையில், நேற்று பிற்பகல் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அமராவதி உயிரிழந்தார். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக வெண்டிலேட்டர் இயங்காததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அமராவதி உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து அமராவதி உயிரிழந்த விவகாரத்தை ஆராய மருத்துவ கல்லூரி, டீன் குழு ஒன்றை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், “திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், அரை மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு காரணமாக மரணமடைந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில், ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள், எத்தனை துச்சமாக நடத்தப்படுகின்றன என்பதை, இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது. அரசு மருத்துவமனைகள் இத்தகைய அவல நிலையில் இருக்கும்போது, தமிழக மருத்துவக் கட்டமைப்பை ஐரோப்பிய நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும் என்று வெட்கமே இல்லாமல் கூறிக்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். 

 

ஊழல் செய்து சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை என்றால், தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சைதான் வழங்க வேண்டும் என்று ஓடோடிச் செல்லும் திமுக அரசு மற்றும் அமைச்சர்கள், ஏழை எளிய மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகளை, இத்தனை கவனக்குறைவாக நடத்துவதற்கு தமிழக பாஜக சார்பாக வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயர சம்பவத்தில் பலியான சகோதரி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க, திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்