
இயக்குனர் பாலாவின் தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்ற திரைப்படம் 'பிசாசு'. இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைப்பில் பிசாசு 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
அதேபோல் இன்று இயக்குனர் மிஸ்கினின் பிறந்தநாளும் கூட, இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்து இயக்குனர் மிஷ்கினுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார். இந்த விருந்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்கள் பங்கெடுத்துள்ளனர். இந்த விருந்தை இயக்குனர் மணிரத்னம் முன்னின்று வழங்க, இயக்குனர்கள் ஷங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், சசி, பாலாஜி சக்திவேல், லிங்குசாமி என முக்கிய இயக்குனர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கும் நிலையில், இந்த சந்திப்பில் தமிழ் சினிமாவின் நகர்வுகள், முக்கிய நிலைகள் குறித்து பேசப்படாமலா இருந்திருக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.