Skip to main content

நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்!

Published on 28/11/2021 | Edited on 28/11/2021

 

 Dance director Sivasankar passes away

 

ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் (72) மாரடைப்பால் காலமானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

இவர் ‘சூர்யவம்சம்’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘அருந்ததி’, ‘பாகுபலி’, ‘மகதீரா’ உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு  படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும், இவர் தமிழில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’, விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். 800க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சிவசங்கர் 'மகதீரா' படத்திற்குத் தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தெலங்கானா பெண் எம்.எல்.ஏ கார் விபத்தில் பலி!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Telangana woman MLA passed away in a car accident

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் லாஸ்யா நந்திதா (37). முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் செகந்திரபாத் கண்டோன்மெண்ட் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்த நிலையில், இன்று (23-02-24) அதிகாலை ஐதராபாத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டார். சங்கரெட்டி மாவட்டம் படன்செரு சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் உள்ள இருந்த லாஸ்யா நந்திதா படுகாயமடைந்தார். உடனடியாக, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நந்திதாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நந்திதா வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். கார் ஓட்டுநர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, நந்திதா காரில் சென்று கொண்டிருந்த போது  நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில்  ஆட்டோ மீது மோதி விபத்தில் சிக்கினார். அவரது தலையில் காயம் ஏற்பட்டு, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 10 நாட்களில் இரண்டாவது விபத்தில் தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்டோன்மென்ட் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த சயன்னா, ஓராண்டுக்கு முன்பு இறந்ததால் அவரது மகள் லாஸ்யா நந்திதாவுக்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி சீட் வழங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தான் லாஸ்யாவின் தந்தையின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது அதிலிருந்து 4 நாட்களில் மகள் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ரத்தான கல்லூரி கலை நிகழ்ச்சி; மொட்டை மாடியில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 college art show canclelled students protest by sitting on the terrace

சென்னை ராயப்பேட்டையில் உள்ள 'நியூ காலேஜ்' கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்த மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆண்டுதோறும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள  நியூ காலேஜ் கல்லூரியில் ஆண்டு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் திட்டமிட்டபடி வழக்கம்போல் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நியூ காலேஜ் மாணவர்கள் மொட்டை மாடி பகுதியில் அமர்ந்து  கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் மாணவர் ஒருவர் ஆபத்து உணராமல் மொட்டை மாடியில் ஆபத்தான பகுதியில் அமர்ந்து போராட்டம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.